Pages

Tuesday 24 June 2014

நமது குணங்கள் | மாயை உலகம் 5

ஒவ்வொரு நாளும் பூமி சுத்துகிறது , எவ்வளவு காலம் சுத்துகிறது என்று  யாராலும் சொல்ல முடியாது. அறிவியல் அறிஞர்கள் 10000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது . அப்படி தோன்றியது, இப்படி தோன்றியது என்று சொல்லி கொண்டே போகலாம். இருந்தும் சரியாக யாரால்லும் சொல்ல முடிய வில்லை .ஏன் ? எப்படி  என்று ஆராய்ந்து கொண்டே இருக்கிறோம். நாம் கற்பது எல்லாம் பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல , வாழ்கையில் எப்படி வாழ வேண்டும் என்பதற்காகவும்தான் . நாம் அதை மறந்து எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று இருக்காதிர்கள் , கடைசியில் வருத்தபடுவிர்கள் . நாம் வருகிறோம் , படிக்கிறோம் , சம்பாதிக்கிறோம் , அனுபவிக்கிறோம் ,இருந்தும் போதவில்லை என்ற வார்த்தை மட்டும்தான் நம் வாயில் வருகிறது. ஏன் நாம் நம்மை பார்ப்பதை விட பிறரை கவனிக்கிறோம் . அவன் அங்கு செல்கிறான் நாமும் செல்ல வேண்டும் , அவன் அதை சாப்பிடுகிறான் அதை உண்ண வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே அதிகம் வந்து , பின் அவனாகவே மாறுகிறோம் . நமது குணங்கள் மாறுகிறது பழக்கம் மாறுகிறது . நம் உறவினர் நண்பர்களிடம் இருந்து பிரிந்து விடுகிறோம் , புதிய நண்பர்கள் புதியஉலகம் என்று நம்மை மறக்கிறோம் , ஏன் பின் அவன் சொந்த இடத்திற்கு வந்தாலும் அவனது செய்கையை மாற்றிக்கொள்ள முடியவில்லை . ஏன் ? அவனது பழக்கம் தொடர்ந்து வந்து கொண்டே  இருக்கும். அவன் மனது மாறி விடும். இல்லாதவன் இருப்பவன் என்ற எண்ணம் வரும் போது உண்மையான நண்பர்கள் கூட  அவன் பின் போவதில்லை. வாழ்க்கையில் இருள் தொடரும் நேரம் வந்ததும் அவனது தவறுகள்  உணர்கிறான்.
 

No comments:

Post a Comment